131-அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கீழப்பழுவூர் அரியலூர்.
கல்லூரியானது அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் உள்ளே உள்ளது.
இதனால் நெடுஞ்சாலை அருகே நுழைவுவாயில் அமைக்க வேண்டி மாண்புமிகு
அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள் உடனடியாக அவரது தொகுதி
மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து நுழைவுவாயில் கட்டுவதற்கு 20-08-2025
அன்று அடிக்கல் நாட்டினார்.